ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக கவிஞர் வைரமுத்து உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். வைரமுத்து மீதான வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். என் மனம் உடைக்கப்பட்டு கிடக்கிறது, கடந்த 10 நாட்களாக என் மூச்சு முட்டிக்கிடக்கிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தமது கட்டுரையை அரங்கேற்றியது தவறா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழுக்கு தடம் பதித்தவர்களை அறிமுகப்படுத்த ஆசைப்பட்டேன். ஆண்டாளின் கவிதையில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது. தமிழ் வெளியில் தாம் கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாளின் குரல் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
ஆண்டாளின் கவிதையில் அழகியல் கொட்டிக்கிடக்கிறது. தமிழ் வெளியில் தாம் கேட்ட முதல் பெண் குரல் ஆண்டாளின் குரல் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.
source: oneindia.com

No comments:
Post a Comment