நீதி மற்றும் நீதித்துறையை பாதுகாக்கவே நாங்கள்
மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தோம். நாங்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு
தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி குரியன்
ஜோசப் கூறியுள்ளார். போர்க்கொடி"உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில
மாதங்களாக முறையாக இல்லை; விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 'இதை
உடனடியாக சரி செய்யாவிட்டால், நீதித் துறையை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும்
அது பாதிக்கும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, மூத்த
நீதிபதிகள், ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய்,
எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் புகார் கூறினர்.
நம்பிக்கை இந்நிலையில், கேரள மாநிலம் காலடியில் டிவி ஒன்றுக்கு நீதிபதி
குரியன் ஜோசப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: நீதி மற்றும்
நீதித்துறை நலனுக்காக மட்டுமே நாங்கள் செயல்பட்டோம். இதனை தான் நாங்கள்
நேற்று டில்லியில் கூறினோம். இந்த விஷயத்தில் இதற்கு மேல் ஒன்றும்
இல்லை.நீதித்துறையில் உள்ளவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டவே நீதிபதிகள்
பேட்டி கொடுத்தனர். நாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை.
எங்களது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும். நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களது நடவடிக்கை சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும். நாங்கள் எழுப்பிய பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment