தேசிய கட்சிகளுக்கு, தமிழகத்தில் இடம் கிடையாது,'' என, லோக்சபா
துணை சபாநாயகர், தம்பிதுரை கூறினார். எதிர்பார்ப்பு : சென்னை விமான
நிலையத்தில் அவர் தெரிவித்ததாவது: ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும்
கட்சி ஆரம்பிக்கலாம்; தடை கிடையாது. ஆனால் எல்லாரும், எம்.ஜி.ஆர்., ஆக
முடியாது. எம்.ஜி.ஆர்., 1953ல், தி.மு.க.,வில் இணைந்த போது, தேர்தலில்
போட்டி யிடவில்லை; சமூக சீர்திருத்த பணியை தான் செய்தார். 1956ல் தான்
தேர்தலில் போட்டி யிட முடிவு செய்தார். சமூக நீதிக்காக வாழ்ந்தவர்
அவர்.தற்போது, அரசியலுக்கு வருவோர், எதற்காக வருகின்றனர் என, தெரிய வில்லை.
எம்.ஜி.ஆர்., கொள்கை, ஜெ., ஆட்சியை தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்; இந்த
ஆட்சி தான் நீடிக்கும்.
நான் யாரையும், குறை சொல்ல தயாராக இல்லை. பார்லி., கூட்டம் துவங்க உள்ளது.
தமிழகத்திற்கான உதவிகளை பெறவும், மீனவர்கள் பிரச்னைகளை தீர்க்கவும் குரல்
கொடுத்து, தமிழகத்தின் உரிமையை பெறுவோம்.அ.தி.மு.க.,வுடன் போட்டியிட, எந்த
தேசிய கட்சிகளும் கிடையாது. போட்டி கிடையாது : தேசிய கட்சிகள்,
'நோட்டா'வுடன் தான் போட்டியிடுகின்றன.
தமிழகத்தில், திராவிட இயக்கங்கள்- தேசிய கட்சிகள் இடையே, என்றைக்குமே போட்டி கிடையாது. தேசிய கட்சியான, காங்., தோற்கடிக்கப்பட்ட முதல் மாநிலம், தமிழகம் தான். திராவிட பாரம்பரியத்தை யாரும் அழித்துவிட முடியாது; தேசிய கட்சிகளுக்கு, தமிழகத்தில் இடம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment