புழல் சிறையில் நடந்த சிறப்பு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 100 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
புழல்
சிறையில் பல்வேறு வழக்களின் கீழ் கைதிகளும், விசாரணை கைதிகளும்
அடைக்கப்பட்டுள்ளனர். இன்று லோக் அதாலத் முகாம் நடைபெற்றது. திருவள்ளூர்
மாநவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
13
நீதிபதிகளை கொண்ட குழு நீதிமன்ற வழக்குகளை விசாரித்தனர். அதில்171
வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு அதன் மூலம் 100 விசாரணை கைதிகள்
விடுவிக்கப்பட்டனர்.
லோக் அதாலத் என்பது சமரசம் மூலம் மக்களின்
பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும்.
இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின்
விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு
காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
source: oneindia.com

No comments:
Post a Comment