
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசு, 2018ம் ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியலில், மதஸாக்களுக்கு 10 நாட்களை குறைத்து அறிவித்துள்ளது.
இது குறித்து உ.பி. மதரஸா வாரிய பதிவாளர் ராகுல் குப்தா கூறியதாவது-
பிற மத பண்டிகைகள்
முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரஸாக்கள் மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு விடுமுறைகள் விடுவதில்லை. இதை மாற்றி, பிற மாற்று மதத்தினரின் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், தீபாவளி, தசரா, மகாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, ரக்ஷாபந்த் ஆகிய திருநாட்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
குறைப்பு
அதேசமயம், முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானுக்கு 46 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதை 42 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மதரஸாக்களுக்கு ஆண்டுக்கு 92 விடுமுறை நாட்கள் விடப்பட்டு இருந்தது. அதை 86 நாட்களாக குறைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
எதிர்ப்பு
ஆனால், மதஸாக்களுக்கு விடுமுறை குறைக்கப்பட்டதை அரேபி மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் அமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்த முடிவை திரும்பப் பெறக்கோரி முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதமும் எழுதியுள்ளனர்.
பண்டிகைக்கு செல்வதில் சிரமம்
இதுகுறித்து அரபி மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் திவான்சாஹப் ஜமான் கூறுகையில், “ எங்களின் இந்த ஆண்டு காலண்டர் படி ரம்ஜான் பண்டிக்கைக்கு 2 நாட்கள் முன்பாகவே விடுமுறை தொடங்குகிறது. இதற்கு முன் 10 நாட்களுக்கு முன்பே விடுமுறை தொடங்கிவிடும். விடுமுறை குறைவாக இருப்பதால், மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களின் வீடுகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். அரசின் இந்த புதிய முடிவு தவறான செய்தியை வழங்கி இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
முதல்வரின் நோக்கம்
அரசின் இந்த முடிவு குறித்து சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சவுத்ரி லட்சமி நரைன்கூறுகையில், “ அரசின் இந்த முடிவு அனைத்து மதரஸாக்கள், பல்கலைகள், வாரியங்களுக்கும் பொருந்தும். முக்கிய தலைவர்கள் பிறந்தநாளுக்கு விடுமுறை விடாமல், அவர்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஆதித்யநாத் அரசின் நோக்கமாகும்’’ என்றார்.
No comments:
Post a Comment