எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது காரசார விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.. நிறைவேறியது 'முத்தலாக்' கூறி விவாகரத்துச் செய்யும் நடைமுறையால், இஸ்லாம் சமூகத்து பெண்கள் பாதிக்கப்படுதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் விதமாக, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முத்தலாக் கூறுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆளும், பா.ஜ., கூட்டணிக்கு, லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த வியாழன் (2017 டிச.,28) அன்று, இந்த மசோதா நிறைவேறியது. விவாகரத்து இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் தாக்கல் செய்து பேசும்போது, இந்த மசோதா முக்கியமானது. இதனை விவாதத்திற்கு எடுக்க வேண்டும். மசோதா லோக்சபாவில் நிறைவேற்றிய பின்னரும் வரதட்சணை கொடுக்கவில்லை எனக்கூறி மொரதாபாத்தில் தலாக் கூறி விவாரத்து நடந்துள்ளது எனக்கூறினார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பேசும்போது, முத்தலாக் மசோதா தாக்கல் காரணமாக அமளியில் ஈடுபடுவதாக அமைச்சர் கூறுகிறார்.
ஆனால், அதற்காக கலவரத்தில் ஈடுபடவில்லை. நாட்டில் நடப்பதை கண்டித்து தான் அமளியில் ஈடுபட்டோம். மக்கள் இறந்து வருகின்றனர். மசோதாவை குறித்து நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம் எனக்கூறினார்.அப்போது அமைச்சர் அருண் ஜெட்லி குறுக்கிட்டு, மாநில பிரச்னைகள் மாநில அரசுகள் தான் கவனிக்க வேண்டும்.
ஆனால், முத்தலாக் தடுப்பு மசோதா முக்கியமானது எனக்கூறினார். தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவாதம் நடந்த பிறகு, சபை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment