
முத்தலாக் விவகாரத்தில் காங்., இரட்டை வேடம் போடுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.இன்று பார்லி.,யில் நடந்த ராஜ்யசபா கூட்டத்தின் போது மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் மசோதாவை தாக்கல் செய்ய முயன்றார். அப்பொழுது காங்.,கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் :‛‛ முத்தலாக் விவகாரம் கடந்த வாரம் லோக் சபாவில் விவாத்திற்கு வந்தபோது காங்., கட்சி அதை ஆதரித்தது. ஆனால் இன்று ராஜ்யசபாவில் மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டது. நடப்பு பார்லி., கூட்ட தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் இழுத்தடிக்க காங்., முயற்சிக்கிறது. இதன் மூலம் முத்தலாக் விவகாரத்தில் காங்., கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. '' இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment