Latest News

ஒக்கி புயல்; மீட்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ள கேரள மீனவர்கள்: அரசின் நடவடிக்கை குறித்து குற்றச்சாட்டு

கேரளாவில் கொச்சியை அடுத்த செல்லனம் கடற்கரையில் சனிக்கிழமை அன்று ஒகி புயல் சீற்றம் காரணமாக குடியிருப்புப் பகுதியைத் தொட்டுள்ள கடல் அலைகள். 
ஒக்கி புயல் காரணமாக கடலுக்குள் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் கேரள மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை மீட்பதில் அரசு துரிதப் பணியில் ஈடுபடவில்லை என அதிருப்தியில் உள்ள  கேரள மீனவர்கள் இன்று காலை தாங்களாகவே கடலுக்குள் சென்றுள்ளனர்.

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்கச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 115 மீனவர்கள் கடலுக்கு சென்றவர்கள் இதுவரை திரும்ப வரவில்லை எனக் கூறப்படுகிறது.

விழிஞ்சம் கடற்கரைக்கு அருகில் மிகவும் சிதைந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து தங்கள் நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்வதென கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள் குழு முடிவெடுத்தது. இதனையடுத்து பூந்துராவிலிருந்து 40 படகுகளும் விழிஞ்சத்திலிருந்து 15 படகுகளும் உணவு மற்றும் குடிநீரோடு புறப்பட்டுச் சென்றுள்ளன.

கேரளாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.சுரேந்திரன் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜே.மெர்சிக்குட்டி அம்மா ஆகியோர் கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு நவம்பர் 30 முதல் மீட்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், மாநிலத்தில் புயலின் பாதிப்பு பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதாக, கடலோர கிராம மக்கள் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

''நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தராத வகையில் நிவாரண முகாம்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது துரதிஷ்டவசமாக அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது. எங்கள் பகுதியில் ஒரு கட்டுப்பாட்டு அறையைத் திறக்கவேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை'' என பூந்துரா கிராமவாசி ஒருவர் கூறினார்.

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.