Latest News

மக்கள் ஜனநாயக கட்சி தலைவராக மெகபூபா முப்தி மீண்டும் தேர்வு

ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு மெகபூபா முப்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜம்முவில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கட்சி நிர்வாகிகள் கூடி தங்கள் தலைவராக மெகபூபாவை ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்தனர்.

அவர் இப்பதவிக்கு தொடர்ந்து 6-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூறினர்.

கட்சி நிர்வாகிகள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மெகபூபா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீரில் நல்லிணக்கமும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியும் ஏற்படுத்தும் நமது நோக்கம் நிறைவேற நாம் அனைவரும் அயராது உழைப்போம்” என்று கூறியுள்ளார்.

57 வயதான மெகபூபா சட்டப் பட்டதாரி ஆவார். 1996-ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் உச்சத்தில் இருந்தபோது, தனது தந்தை முப்தி முகம்மது சயீது உடன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்தார். 1999-ல் முப்தி முகம்மது தனிக்கட்சி (பிடிபி) தொடங்கியபோது அவரது அரசியல் வாரிசாக உருவானார். கடந்த ஆண்டு தந்தையின் மறைவை தொடர்ந்து காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார். இம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.