ஜெயலலிதாவுக்கு குழந்தை இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகை லதா கூறியுள்ளார்.
அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர் மன்றம் சார்பில் இன்று மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை லதா கலந்துகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் லதா கூறுகையில், ''ஜெயலலிதாவுக்கு குழந்தை
இருப்பதாகக் கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜெயலலிதா உயிரோடு
இருக்கும் போது சொல்லாமல் இப்போது மகள் இருப்பதாகச் சொல்வது உள்நோக்கம்
கொண்டது. சொத்துக்காக பலர் புரளி பரப்புகின்றனர்.
ஒருவரின் தனிப்பட்ட
வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை விமர்சனம் செய்ய
யாருக்கும் உரிமை கிடையாது. யாரும் விமர்சிக்கவும் முடியாது.
ஜெயலலிதாவுக்கு குழந்தை இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அப்படி
இருந்திருந்தால் ஜெயலலிதாவே தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பார். எந்தத்
தாயும் தனக்கு குழந்தை இல்லை என்று மறுக்க மாட்டார்.
அதிமுகவின் இரு
அணிகள் இணையவேண்டும் என்று முன்பு கருத்து கூறியிருந்தேன். சசிகலா
குடும்பத்தை வெளியேற்றிய பிறகு இரு அணிகள் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்த
ஆட்சி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பணிபுரியும் என்று நம்புகிறேன். இரு
அணிகள் பிளவுபட்டபோது அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முன்பே
மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். இப்போதும் மதுசூதனனுக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்ய இருக்கிறேன்.
தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி,
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி
இருப்பதால் இனி அந்த சின்னத்தை டிடிவி தினகரன் பயன்படுத்த முடியாது'' என்று
லதா கூறினார்.
லதா செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது நடிகை சச்சுவும், எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் கீதா விஜயகுமாரும் உடனிருந்தனர்.
முன்னதாக,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்
என பெங்களூருவில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்திருப்பது
சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment