
ஆர்.கே.நகர் தொகுதியில் வென்ற தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா
புஷ்பா இன்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அமோக வாக்குகள் பெற்று வென்றுள்ளார் தினகரன். அதிமுக, திமுக படுதோல்வி அடைந்துள்ளன.
தினகரனின்
வெற்றியைத் தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக
ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துகளை
தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள தினகரன் வீட்டில் இச்சந்திப்பு
நடைபெற்றது.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது திமுகவின் ராஜ்யசபா
எம்.பி. திருச்சி சிவாவுடன் டெல்லி விமான நிலையத்தில் சசிகலா புஷ்பாவுக்கு
மோதல் ஏற்பட்டது. இம்மோதலைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பாவை
நீக்கியதாக ஜெயலலிதா அறிவித்தார்.
சசி குடும்பம் மீது குற்றச்சாட்டு
இதையடுத்து ராஜ்யசபாவில் தம்மை ஜெயலலிதா அடித்ததாக புகார் கூற நாடு
முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஜெயலலிதா மறைவின் போது
சசிகலா குடும்பமே இதற்கு காரணம் என பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் சசிகலா
புஷ்பா.
சசிகலா புஷ்பா கணவருக்கு அடி உதை
இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் மனு கொடுத்தார் சசிகலா புஷ்பா. அதிமுக
பொதுக்குழு பொதுச்செயலர் பதவிக்கு சசிகலா புஷ்பாவின் கணவர் மனு வாங்கச்
சென்ற போது சசிகலா ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
தனி ஆவர்த்தனத்தில் சசிகலா புஷ்பா
அத்துடன் அதிமுகவின் பொதுச்செயலராக நியமனம் செய்யப்பட்டதையும் எதிர்த்து
தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தார் சசிகலா புஷ்பா. பின்னர் ஓபிஎஸ்
தனி அணியாக பிரிந்த போதும் சசிகலா புஷ்பா தனி ஆவர்த்தனம் செய்து வந்தார்.


அதிமுகவில் பரபரப்பு
தொடர்ந்து சசிகலா குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வந்தார் சசிகலா புஷ்பா.
இந்நிலையில் தினகரனை இன்று திடீரென சசிகலா புஷ்பா சந்தித்துள்ளது
அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

No comments:
Post a Comment