
விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தற்போது பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்ப
படிவங்கள் கிடைக்கிறது. இதனால் பலரும் அந்த இணையதளத்தில் தேர்வுக்கு
விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 19.5 லட்சம்
பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்து
இருக்கிறது.
மேலும் விஏஓ உள்ளிட்ட 9351 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
என்று என்றும் கூறியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையம் முடங்கி
விண்ணப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாக முடியாது
என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த விண்ணப்பத்திற்கான கட்டணத்தை டிசம்பர் 21ம் தேதி வரை
செலுத்திக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது.

No comments:
Post a Comment