Latest News

மந்திரவாதியின் பேச்சை கேட்டு இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர் : ஒடிசாவில் பயங்கரம்

 Sorcerer and a man Arrested for attempting to sacrifice a young girl in Odisha
ஒடிசா மாநிலத்தில் மந்திரவாதியின் பேச்சை நம்பி நீண்ட ஆயுளுக்காக உறவினர் ஒருவர் இளம்பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசா மாநிலம் பலாசூர் மாநிலத்தில் உள்ள பஞ்சபாடி கிராமத்தை சேர்ந்தவர் கைலாஷ் மல்லிக். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மயூர்பாஞ்ச் மாவட்டம் உடாலா நகரைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரின் தொடர்பு சமீபத்தில் கிடைத்து உள்ளது.

கைலாஷ் தன்னுடைய உடல் நலக்குறைவு குறைத்தும், அதை தீர்க்க வழி சொல்லுமாறும் அந்த மந்திரவாதியை அணுகி உள்ளார். அதற்கு அந்த மந்திரவாதி திருமணமாகாத இளம்பெண் ஒருவரை மந்திரம் ஓதி நரபலி கொடுத்தால், நீண்ட நாட்கள் வாழ முடியும் என்று கைலாஷிற்கு சொல்லி உள்ளார்.

இதனையடுத்து கைலாஷ் , அவரது நண்பர் மற்றும் மந்திரவாதி மூன்று பேரும் சேர்ந்து நேற்று முன் தினம் கைலாஷின் உறவுக்கார பெண் ஒருவரை அவரது வீட்டில் இருந்து கடத்தி நரபலி கொடுக்கும் இடத்திற்கு கொண்டு சென்று உள்ளனர்.

இளம்பெண்ணின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை மீட்டு மூவருக்கும் தர்ம அடி கொடுத்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மந்திரவாதி உட்பட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.