ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக என்ன ஆகுமோ என்பதற்கு மக்கள் எனக்கு அளித்த
பேராதரவு மூலம் கட்சி ஆட்சியை நடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கி உள்ளார்கள்
என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அடையாரில் அவர் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டு முகம் என்கிறார் ஓபிஎஸ் ஆமாம் அன்பானவர்களுக்கு அன்பான முகமும்
துரோகிகளுக்கு ருத்ரதாண்டவமும் காட்டுகிறேம். ஏன் தோல்வி பயத்தால் உடனடியாக
கட்சிக் கூட்டத்தை கூட்டுகின்றனர். உண்மையான தொண்டர்கள் என் பக்கம்
வாருங்கள். எத்தனைப்பேர் கட்சிக்குள் கட்சி பெயர் சின்னம் என்ற மாயையில்
சிக்கி இருப்பவர்கள் அங்கிருக்கிறார்கள்.
உண்மையில் கட்சி முக்கியம்
பதவியை விட கட்சி முக்கியம் என்று நினைப்பபவர்களும் அதிமுகவில்
இருக்கிறார்கள். அவர்கள் என் வெற்றியை பற்றி யோசிப்பார்கள். ஜெயலலிதா இல்லை
இனி ஆட்சிக்கு வர முடியாது, இருக்கும் வரை பதவியை அனுபவித்து
விட்டுச்செல்லலாம் என்று நினைப்பபவர்கள் எண்ணத்தை ஆர்.கே.நகர்
பொய்பித்துவிட்டது.
கட்சியை நிச்சயம் அடுத்தக்கட்டத்துக்கு
கொண்டுச்செல்ல ஆர்.கே.நகர் மக்கள் எனக்கு வாய்ப்பை வழங்கி உள்ளார்கள். ஒரு
பூத் அல்ல, அனைத்து பூத்களிலும், அனைத்து ரவுண்டுகளிலும் லீடிங் கொடுத்து
மக்கள் வெல்ல வைக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயமா!
நான் ஆரம்பம்
முதலே அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று தெரிவித்தேன் அதுதானே நடந்தது.
20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கியதாக சொல்கிறார்கள். 20 ரூபாய் கொடுத்து
பின்னர் பணம் தருகிறேன் என்றால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? அவ்வளவு
நம்பிக்கை என் மீது மக்களுக்கு இருந்தால் நான் ஏன் 20 ரூபாய் தந்திருக்க
வேண்டும்? சும்மாவே ஓட்டு கேட்டிருக்கலாமே.
இப்போது கூட செயல்தலைவர்
என்று ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் நினைத்து விட்டார்
வாக்குகள் அப்படியே இருக்கும் என்று, ஆனால் காலம் மாற்றிவிடும். நான் 20
ரூபாய் கொடுத்து அப்புறம் தருகிறேன் என்று கடன் சொல்லி ஓட்டு கேட்டால்
மக்கள் வாக்களிப்பார்களா? சுடச்சுட ரூ.6000 கேஷ் இருக்கிறது அதற்கு
வாக்களிப்பார்களா?
நான் அப்போதே சொன்னேன். ரூ.120 கோடி
கொடுத்துள்ளார்கள். இன்னும் கூட அதிகம் கேளுங்கள் உங்கள் பணம் தான் ஆனால்
வாக்களிக்கும் போது யோசித்து போடுங்கள் என்று சொன்னேன். இந்த 20 ரூபாய்
விவகாரத்துக்கு மீடியாக்கள் முற்றுப்புள்ளி வையுங்கள். நான் ஏமாற்றித்தான்
ஓட்டு வாங்கினேன் என்று கூறுகிறார்கள். நான் ஏமாற்றியதாகவே
வைத்துக்கொள்ளுங்கள் மக்கள் என்னிடம் ஏமாறத்தயாராக இருக்கிறார்கள்
அவர்களிடம் ஏமாறத்தயாராக இல்லை என்றுத்தானே அர்த்தம்.
மக்களில் சிலர்
இரக்கப்பட்டு வாக்களித்திருக்காவிட்டால் இவர்கள் டெபாசிட் போயிருக்கும்.
என் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்கள் விசாரிக்கட்டும்.
அதற்கு முன்னர் போலீஸை வைத்துக்கொண்டு ரூ.120 கோடி கொடுத்தார்களே அதை
முதலில் தேர்தல் ஆணையம் விசாரிக்கட்டும்.
நான் பேப்பரில்
எழுதிக்கொடுத்து அக்ரிமெண்ட் போட்டு கொடுத்தால் கூட மக்கள் காட்டிக்கொடுக்க
மாட்டார்கள். அப்படி ஒரு பந்தம் ஜெயலலிதா மீதும், என் மீதும் இந்த தொகுதி
மக்களுக்கு உள்ளது. மாயமான் என்கிறார் பன்னீர் செல்வம் நான் 99-ல்
பாராளுமன்ற எம்பி ஆனபோது எங்கிருந்தார் கேளுங்கள். என்ன பொறுப்பிலிருந்தார்
கேளுங்கள்.
அன்று வாக்கு எண்ணிக்கையின் போது என்ன நடந்தது?
போலீஸிடம் என்ன கட்டளை இட்டார்கள்? அதிக வாக்குகள் முன்னிலை வருகிறது
அடித்து உடைக்கச்சொல்லி கட்டளை இட்டார்கள். மதுசூதனனுடன் இருக்கும்
ராஜேஷின் ஆட்களுக்கு அந்த கட்டளை இடப்பட்டது. பத்திரிக்கையாளர்கள்
தாக்கப்பட்டனர்.
பிரவீன் நாயரே ஓடிப்போனார். நாங்கள் உடனடியாக மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இந்த பிரச்சனை தீரவில்லை என்றால் இப்போதே இந்த கணமே நீதிமன்றம் செல்வோம் என்றோம். உடனே அவர் தலையிட்டு நல்லபடியாக பிரச்சனை தீர்க்கப்பட்டது.
பிரவீன் நாயரே ஓடிப்போனார். நாங்கள் உடனடியாக மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இந்த பிரச்சனை தீரவில்லை என்றால் இப்போதே இந்த கணமே நீதிமன்றம் செல்வோம் என்றோம். உடனே அவர் தலையிட்டு நல்லபடியாக பிரச்சனை தீர்க்கப்பட்டது.
திமுகவும்
நானும் கூட்டுச்சதி என்கிறார்கள். கேலிக்கூத்தாக இல்லையா? 70 ஆண்டுகள்
பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி பெரிய கூட்டணியுடன் நிற்பவர்கள் இப்படி
வருவார்களா? திமுகவின் தலைமையின் தவறான கணக்கீடு காரணமாக அவர்கள்
தோற்றார்கள். அவர்கள் கட்சி வாக்குகள் எனக்கு விழுந்திருக்கலாம்.
சசிகலா
புஷ்பா சந்தித்தார், நீங்கள் அரசியலில் இல்லாத நேரத்தில் நான் கட்சிக்குள்
வந்தேன். தற்போது உங்கள் செயல்பாடு, துணிச்சல் எனக்கு பிடித்துள்ளது.
எதிர்காலத்தில் உங்கள் தலைமையின் கீழ் இணைந்து செயல்பட விரும்புகிறேன்
என்றார். தவறுகளை விட்டு வருபவர்களை புறக்கணிக்க முடியாது. ஓபிஎஸ் சேவல்
சின்னத்திற்கு எதிர்ப்பு காரணமாக சேவல் கழுத்தையே அறுத்தவர், வளர்மதி
ஜெயலலிதாவை பேசாத பேச்சா? அவர்களை அரவணைத்து ஜெயலலிதா ஏற்றுகொள்ளவில்லையா?
ஆகவே அதையெல்லாம் வைத்து பார்க்க முடியாது.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

No comments:
Post a Comment