ஒக்கி புயலால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களில் 737 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு
தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 29-ம் தேதி ‘ஒக்கி‘ புயலாக
உருவெடுத்தது. தொடர்ந்து அதே இடத்தில் புயல் மையம் கொண்டிருந்ததால், அன்று
நள்ளிரவு முதல், வியாழக்கிழமை மாலை வரை 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று
இம்மூன்று மாவட்டங்களையும் தாக்கியது. தொடர்ந்து கனமழை கொட்டத் தொடங்கியது.
இந்நிலையில் மீனவர்கள் மீட்கப்படுவது
குறித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''திருச்சூரில் 52
தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் 66 மீன்பிடி படகுகளுடன் 685
மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்டுள்ளோம்.
மொத்தத்தில் 737 மீனவர்கள்
கடலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகின்றன. மீனவர்கள் இதுகுறித்து மேலும் அச்சம்கொள்ளத்
தேவையில்லை'' என்றார் ஜெயக்குமார்.
No comments:
Post a Comment