Latest News

  

12 ஆண்டுகளை கடந்துள்ள TIYAவின் தாயக நிர்வாகிகள் கூட்டம் (புகைப்படங்கள்)





அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை TIYA வின் நிர்வாகிகள் கூட்டம் 29.12.2017 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் அதிரை தலைவர் H.சபீர் அஹமது அவர்கள் தலைமையிலும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்புற நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

இதனைத் தொடர்ந்து அதிரை TIYAவின் இறுதியாக, கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட,
தீர்மானங்கள்:
1. நமது தெருவை சேர்ந்த  மன்சூர் அவர்களுக்கு மருத்துவ செலவிற்க்காக   அமிரக  TIYA  முலம் வசூல் செய்து  கொடுப்பது என முடிவசெய்யபட்டுள்ளது.

2. மேலத்தெருவை சேர்ந்த ஒரு சகோதரர் கேன்சர் நோயினால் பாதிக்கபட்டு சிகிச்சை செய்துவரும் அவர்களின் மருத்துவ செலவிற்க்காக தாயாக TIYAவின் முலம் வசூல் செய்து கொடுப்பதாக முடிவு செய்யபட்டுள்ளது.

3. ஜனவரி 2018ல்  தாயாக TIYA  சார்பாக கண் பரிசேதனை முகாமும் மற்றும் இரத்த தான முகாமும்  நடத்துவதாக முடிவு செய்யபட்டுள்து
4. அல் ஆமின் பள்ளியில் இருந்து வந்த கடிதத்தை அமிரக TIYA விற்க்கு அனுபி வைப்பது என்று முடிவு செய்யபட்டது'

5. மாத மாதம் வழங்கி வந்த ஏழைகள், ஆதரவற்ற முதியவர்கள் விதவைகள் ஆகியோருக்கு பென்சன் பணம் ஜனவரியில் இருந்து 400ருபாயில் இருந்து 500ருபாயாக  உயர்த்தி.கொடுக்க அமிரக TIYAவின் முலம் முடிவு செய்யபட்டுள்ளது இது வரை 16 நபர்களுக்கு வழங்கி வந்தது புதிதாக  6 நபர்களை இனைத்து மொத்தம் இனி வரும் காலங்களில் 22 நபர்களுக்கு வழங்குவதென தாயாக TIYA முலம் தேர்வு செய்து கொடுக்கபடும் என  முடிவு செய்யட்டுள்ளது.
 
7. வருகின்ற ஜனவரி மாத கூட்டத்தில் ஜடி கார்டு,நூலகம் சரிசெய்தல்,மற்றும் கேமரா ஆகிய திர்மானங்கள் வருகின்ற ஜனவரி மாத கூட்டத்தில்  நிரைவேற்ற முடிவு செய்யபட்டுள்ளது'

8. இன்றுடன் தாயாக TIYA மற்றும் அமிரக TIYA தோற்றுவித்து 12 ஆண்டுகளை கடந்துள்ளது (29-12-2005) அன்று தொடங்கி (29-12-2017) கடந்துள்ளது ’12 ஆண்டுகளை கடந்து என்னற்ற சேவைகளை செய்து வரும் TIYA இன்னும் பல சேவைகளை செய்ய வேண்டுமென்று நாம் அனைவரும் இறைவனிடம் து.ஆ செய்வோம்.
கஃபாரா துஆவுடன் இனிதே  நிறைவடைந்தது.

என்றும் அன்புடன்
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அதிரை TIYA.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.