நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது,
“தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் மேலும் குடிமராமத்துப் பணிகள்
மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம்,
குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும். 3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு
ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும்.
அரசு மீது குறை சொல்வதை மட்டுமே திமுக செய்துவருகிறது.
குறை
கூறுவோர் கூறிக்கொண்டே இருப்பார்கள், குறிப்பாக திமுக அதிகமாக குறை
கூறுகிறது. தமிழகத்தில் தடுப்பணைகளை கட்ட அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு
செய்துள்ளது. பலரின் துணையோடு ஆட்சியை கலைக்க நினைத்தால் ஸ்டாலின் கனவு
பகல்கனவாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது,
“தமிழக
மக்களின் இதயங்களில் மக்கள் திலகமாக விளங்குபவர் எம்.ஜி.ஆர். எம்ஜிஆர்
போலவே வாரி வழங்கிய அட்சயப் பாத்திரம் ஜெயலலிதா. மறக்க முடியாத மாபெரும்
தலைவராக மக்கள் மனங்களில் எம்ஜிஆர் வாழ்கிறார்.
முதல்வராக ஸ்டாலின்
முயன்றும் எதுவும் மக்களிடம் எடுபடவில்லை. தற்போதைய ஆட்சி தொடரக்கூடாது என
பலரும் திட்டம்போட்டு வருகிறார்கள். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக
மக்கள் ராமச்சந்திர ஜெயந்தியாக கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு
பின் அதிமுக அழிந்து விடும் என ஸ்டாலின் நினைத்தார்.குடும்ப ஆதிக்கம்
புகாமல் அதிமுக ஆட்சி தொடரும்" என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
No comments:
Post a Comment