மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த
நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கையில் பாஜகவை
காங்கிரஸ் தோற்கடித்தது.
காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி,
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும்
14,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
காங். வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66,810 வாக்குகளை எடுக்க, பாஜக
வேட்பாளர் ஷங்கர் தயாள் திரிபாதி 52,677 வாக்குகளையே பெற முடிந்தது.
சாட்னா மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை ஞாயிறு காலை 8 மணிக்குத் தொடங்கியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரேம் சிங் (65) மரணமடைந்ததையடுத்து இந்தத் தொகுதி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment