பிஹாரில் திறந்த வெளியில் மலம் கழித்தலைத் தடுத்து நிறுத்த ஆசிரியர்களுக்கு நூதனப் பணி ஒன்றை அம்மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.
பிரதமர்
மோடியின் கனவுத் திட்டமான 'ஸ்வச் பாரத் அபியான்' திட்டத்தின் முக்கியக்
குறிக்கோள் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலங்களை உருவாக்குவது.
அதை மாநிலம் முழுவதும் அமல்படுத்த பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
திறந்த வெளியில் மலம் கழித்தலைத் தடுத்து நிறுத்த ஆசிரியர்களை பணியில்
இறக்கியுள்ளது அம்மாநில பள்ளிக் கல்வித்துறை. திறந்த வெளியில் மலம்
கழிப்பவர்களுக்கு கழிப்பறையை பயன்படுத்தக் கற்றுத்தரவும், அதற்கு
கீழ்ப்படியாதவர்களை புகைப்படம் எடுக்கவும் அவர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே பணிச்சுமை அதிகமாக
உள்ளதாகவும், இந்தப் புதிய உத்தரவு ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவும்,
இருப்பதாக பிஹார் மாநில ஆசிரியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சத்ருகன்
பிரசாத் சிங் கூறியுள்ளார்.
இந்தப் புதிய உத்தரவை ஆதரித்து மாநில
கல்வி அமைச்சர் கிருஷ்ணா நந்தன் பிரசாத் வர்மா கூறுகையில், ''ஆசிரியர்கள்
அறிவாளிகள், அதனால் மக்களுக்கு திறந்தவெளியில் மலம் கழித்தலின் தீமைகளை
எளிதில் எடுத்துக் கூற முடியும். அவர்கள் இப்பணியை எந்நேரமும் செய்ய
வேண்டாம், காலை அல்லது மாலை நேரம் கிடைக்கும்போது செய்தால் போதும். இதனால்,
அவர்களின் ஆசிரியர் பணி பாதிக்கப்படாது'' என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment