உத்தரப் பிரதேசத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத ஒருவரை, காலணியால்
அடித்து உதைத்த கந்து வட்டி ஆசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்
பிரதேச மாநிலம் முசாபர்நகரில் வட்டிக்கு பணம் வாங்கிய நபர் ஒருவர்
குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திருப்பிச் செலுத்த முடிய வில்லை. இதையடுத்து
அவரிடம் வட்டிக்கு பணம் கொடுத்த கந்து வட்டி நபர், சரமாரியாக
தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காலணியால்
கொடூரமாக தாக்கிய கந்து வட்டி ஆசாமியை கைது செய்தனர். இதுமட்டுமின்றி கந்து
வட்டி கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment