காங்கிரஸ் கட்சி 50%-க்கும் அதிகமாக இடஒதுக்கீடு அளிப்பதாக ஹர்திக்
படேல் கூறியதற்கு வினையாற்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இடஒதுக்கீடு
உச்சவரம்பான 50% என்பதை ஒன்றும் செய்ய முடியாது, அது மீற முடியாதது என்று
கூறியுள்ளார்.
இதுகுறித்து அருண் ஜேட்லி கூறும்போது, “இதுவரை நான்
அறிக்கைகளை பார்த்த வரையில் காங்கிரஸ்-ஹர்திக் படேல் கிளப் பரஸ்பர சீரழிவு
என்று தெரிகிறது.
நாட்டின் சட்டம் தெளிவாக உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தினால் உறுதி
செய்யப்பட்ட ஒன்று. ராஜஸ்தான் விவகாரத்தில் கடந்த வாரம்தான் 50%
இடஒதுக்கீட்டு வரம்பை மீற முடியாது என்பது மறு உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் மக்களையும் தங்களையும் ஏமாற்றிக் கொள்ளலாம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கு இதில் இடமில்லை” என்றார்.
இவர்கள் மக்களையும் தங்களையும் ஏமாற்றிக் கொள்ளலாம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளுக்கு இதில் இடமில்லை” என்றார்.
No comments:
Post a Comment