ஆசிரியர் திட்டியதால்..4 மாணவிகள் தற்கொலை...வீடியோ
பனப்பாக்கம் : கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகள்
விவகாரத்தில் ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மாணவிகளின்
உடல்களை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியர் தரக்குறைவாக திடிட்டியதோடு,
பெற்றோரையும் அழைத்து வரச்சொன்னதில் மனமுடைந்த 4 மாணவிகள் அரக்கோணம் அருகே
உள்ள ராமாபுரத்தில் இருந்த விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து
கொண்டனர். பனப்பாக்கத்தைச் சேர்ந்த தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகிய நான்கு
மாணவிகளும் ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம்
வகுப்புப்படித்து வந்துள்ளனர்.
மாணவிகளின் இந்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இறந்த மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து மாணவிகளின் உடல்கள்
சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உடல்களை வாங்க மறுத்து பனப்பாக்கம்
பகுதியில் மாணவிகளின் உறவினர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவிகளின் மரணத்திற்கு ஆறுதல்
சொன்ன ஆசிரியை மீனாட்சி மீது நடவடிக்கை எடுத்தவர்கள் லல்லி என்ற ஆசிரியை
மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மேலும்
மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை
வழங்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய
பின்னர், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து
மாணவர்களின் உடல் வைத்திருந்த ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் வழிவிட்டனர்.
No comments:
Post a Comment