குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆசிரியர்களுடனான
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தனது துயரத்தை பகிர்ந்துகொண்ட ஒரு
விரிவுரையாளரை கட்டித் தழுவிய ராகுல் காந்தி.
குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து 2 நாள் பிரச்சார பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அகமதாபாத்தில்
நடைபெற்ற ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் ராகுல் பேசி
முடித்ததும் பங்கேற்பாளர்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, ஓய்வு
வயதை நெருங்கும் ரஞ்சனா அவஸ்தி என்ற பெண்ணிடம் மைக் வழங்கப்பட்டது. அப்போது
நா தழுதழுக்க அவர் பேசும்போது, “1994-ல் சம்ஸ்கிருதத்தில் பிஎச்டி பட்டம்
பெற்றேன். அப்போது முதல் மிகவும் பரிதாப நிலையில்தான் இருக்கிறேன். பணிக்கு
வந்து 22 ஆண்டுகள் ஆகியும் பகுதிநேர ஆசிரியராகவே பணிபுரிகிறேன். மாத
சம்பளம் வெறும் 12,000 மட்டுமே. போதுமான ஊதியம், மருத்துவ விடுப்பு,
ஓய்வூதியம் என எவ்வித அடிப்படை உரிமையும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை.
பிரசவ கால விடுப்பு கூட வழங்கப்படுவதில்லை. எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு
வந்தால் எங்கள் பிர்ச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பகுதிநேர
ஆசிரியர்களுக்கும் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என்றார் கண்ணீர் மல்க.
மோடி மார்க்கெட்டிங் மாடல்
மோடி மார்க்கெட்டிங் மாடல்
இதையடுத்து, ராகுல் கூறும்போது, “சில நேரங்களில் சில கேள்விகளுக்கு
வார்த்தைகளால் பதில் அளிக்க முடியாது” என்றார். பின்னர், மேடையிலிருந்து
இறங்கிய ராகுல், அந்தப் பெண்ணின் இருக்கையை நோக்கிச் சென்று அவரை அணைத்து
ஆறுதல் கூறினார். பின்னர் மேடைக்கு திரும்பிய ராகுல், “காங்கிரஸ் ஆட்சிக்கு
வந்தால் ஆசிரியர்களின் குறைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்” என உறுதி
அளித்தார்.
ராகுல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உண்மையான
வளர்ச்சி என்பது என்ன? பெண்கள், இளைஞர்களுக்கு தரமான கல்வியை அளித்து
அவர்களின் பலத்தைப் பயன்படுத்தி இருந்தால், சிறு, குறு வர்த்தகத்தை
மேம்படுத்தி இருந்தால், அதுதான் உண்மையான வளர்ச்சி. ஆனால், கடந்த 22
ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பாஜக அரசு என்ன செய்திருக்கிறது. குஜராத்,
நரேந்திர மோடியின் மார்க்கெட்டிங் மாடலாகத்தான் உள்ளது” என்றார்.
மேலும்
ராகுல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நரேந்திரபாய்... மும்பை
தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை (ஹபீஸ் சயீது) பாகிஸ்தான் விடுதலை
செய்துள்ளது. பிரதமர் மோடியின் கட்டிப்புடி ராஜதந்திரம் தோல்வி
அடைந்துள்ளது. இன்னும் கூடுதல் கட்டிப்புடி தந்திரம் தேவைப்படுகிறது” என
பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment