பினாமி பரிவர்த்தனை (தடுப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ் முதல்
தீர்ப்பாக டெல்லி வங்கியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டெபாசிட்
செய்த ரூ.15.93 கோடி தொகையை பினாமி சொத்து என சிறப்பு நீதிமன்றம் ஒன்று
அறிவித்துள்ளது.
தொகையை டெபாசிட் செய்தவர், அதன் பயன்தாரரான
உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்தத் தொகை
பினாமி சொத்து என புதிய கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்
தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் டிசம்பர்
2016-ம் ஆண்டு டெல்லி, கே.ஜி.மார்கில் உள்ள கோடக் மஹீந்திரா வங்கி
கிளையில் ஆய்வு நடத்தினர். அதில் ரமேஷ் சந்த் சர்மா என்ற நபர் போலி
நிறுவனங்கள் என்று சந்தேகிக்கக் கூடிய 3 நிறுவனங்கள் பெயரில்
ரூ.15,93,39,116 ரொக்கம் டெபாசிட் செய்தது தெரியவந்தது.
இந்த
டெபாசிட் செய்து முடித்தவுடனேயே சிலபலருக்கு டிமாண்ட் டிராப்ட்
அளிக்கப்பட்டுள்ளது, அதாவது பணத்தை மீண்டும் எடுப்பதற்காக முயற்சி
செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த டிடிக்களை முடக்கிய வருமானவரித்துறை
பினாமி என்று முடிவுகட்டியது. இதனை உறுதி செய்யும் நீதித்துறைக்கு
வருமானத்துறை அனுப்பியது. இதனையடுத்து இந்த டெபாசிட் தொகை பினாமி என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை டெபாசிட் செய்தவரான சர்மா
2006-07-ம் ஆண்டு ரூ.3 லட்சத்துக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல்
செய்ததாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வருமானவரித்துறையினரின்
சம்மன்களுக்கு சர்மாவிடமிருந்து எந்த வித பதிலும் வரவில்லை, ஏனெனில்
முகவரியை ஆய்வு செய்த பொது அப்படி ஒருநபரே இல்லை என்றே தெரிந்துள்ளது. இதனை
விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கும் இந்த
நபரைப் பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஆகவே இந்த நபரின்
வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி சிலர் பணமதிப்பிழப்பு நோட்டுகளை வங்கியில்
டெபாசிட் செய்திருக்கலாம் என்று வருமானவரித்துறை கருதுகிறது.
No comments:
Post a Comment