சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களின் வீடுகள்,
அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம்
அளித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சசிகலா,
தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு அலுவலகங்களில்
சோதனை நடைபெற்றது. இந்த சோதனை மேலும் வேறு சில நிறுவனங்கள் சார்ந்த
இடங்களில் நடந்தாலும் பெரும்பாலும் ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ்
சினிமாஸ் சார்ந்த சசிகலா, தினகரன், திவாகரன் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள்,
கட்சிபிரமுகர்கள் வீடு அலுவலகங்களில் நடந்தது.
இந்நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டது குறித்து வருமான வரித்துறை
அளித்துள்ள விளக்கத்தில், ''சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் 4
போலி நிறுவனங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.பேன்சி ஸ்டீல்ஸ்
பிரைவேட் லிமிடெட், 2.ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், 3.சுக்ரா கிளப்
பிரைவேட் லிமிடெட், 4.இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ்
பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பணம் பரிமாற்றம் செய்வதற்காக மட்டுமே
பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது..
மேலும்,
இந்த நிறுவனங்கள் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டிருப்பதும்
ஆதாரப்பூர்வமாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காகவே இந்த
சோதனை நடத்தப்பட்டு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment