தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்
காவல் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டதன் பேரில் குண்டர்
தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை
பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது
செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும் பல்வேறு குற்றத்
தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக்
காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும்
நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு
வருகின்றனர்.
அதன்படி நந்தனத்தை சேர்ந்த சுரேஷ்(30) மீது சங்கர் நகர் காவல்
நிலையத்திலும், பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்ரம்(38) மீது நந்தம்பாக்கம்
காவல் நிலையத்திலும், நெற்குன்றத்தை சேர்ந்த அருண்(23), வடபழனியை சேர்ந்த
ரமேஷ்(24) ஆகிய இருவர் மீதும் அம்பத்தூர் காவல் நிலையத்திலும் வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொளத்தூரை சேர்ந்த சையது சர்ப்ரஸ் நவாஸ்(35)
மீது திருமுல்லைவாயில் காவல் நிலையத்திலும், புழலைச்சேர்ந்த கண்ணன்(50)
மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவிலும்,
ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் பகுதியை சேர்ந்த பாளையம்(40) மீது ஆயிரம்
விளக்கு காவல் நிலையத்திலும், பாட்டாபிராமைச் சேர்ந்த கக்கன்ஜி (எ)
கக்கன்(23) மீது நசரச்பேட்டை காவல் நிலையத்திலும், காசிமேட்டைச்சேர்ந்த
ஜெயசீலன்(26) மீது காசிமேடு காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
இதில் குற்றவாளி சுரேஷ் மீது சங்கர் நகர் காவல்
நிலையத்தில் 1 கொலை வழக்கு மற்றும் 2 செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளன.
மேலும் இவர் ஏற்கெனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை
சென்றவராவர்.
விக்ரம் மீது நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் செயின்
பறிப்பு வழக்குகள் உள்ளன. அருண், ரமேஷ் ஆகிய இருவர் மீது அம்பத்தூர் காவல்
நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள்
உள்ளன. சையது சர்ப்ரஸ் நவாஸ் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில்
செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. கண்ணன் மீது சென்னை
மத்திய குற்றப் பிரிவு திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
பாளையம் என்பவர் ஆயிரம் விளக்கு காவல் நிலைய
சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி
வழக்குகள் உள்ளன. கக்கன்ஜி (எ) கக்கன் மீது நசரத்பேட்டை காவல் நிலையத்தில்
செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. ஜெயசீலன் மீது காசிமேடு காவல் நிலையத்தில்
திருட்டு வழக்குகள் உள்ளன.
மேற்படி, குற்றவாளிகள் 9 பேரும்
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல்
ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததன் பேரில், சென்னை காவல் ஆணையாளர்
ஏ.கே.விஸ்வநாதன், குற்றவாளிகள் 9 பேரையும் குண்டர் தடுப்புக் காவல்
சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளிகள்
9 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில்
அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment