மும்பை, தானேவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து
அதிகாரிகள் தரப்பில், "மும்பை தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி பகுதியில்
வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மூன்று அடுக்குமாடி கட்டிடம் இடிந்து
விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நேற்றைய நிலவரப்படி மூன்று பேர்
பலியாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 18 வயதான ருஷ்கா
அகமத் கான் என்ற பெண் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதுவரை 9 பேர்
காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிந்து விழுந்த கட்டிடத்தின் பெயர் 'தாஹிர் தின்ஜோர்' என்றும், 7
குடும்பங்கள் அதில் வசித்து வந்ததாகவும் மும்பை தேசிய பேரிடர் மேலாண்மை
தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால், இரண்டாவது நாளாக அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
கட்டிடம்
இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த
நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் தஹிர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment