கொளத்தூர் ராஜமங்கலத்தில் உள்ள நகை மற்றும் அடகு கடை ஒன்றின் பின்
மேற்கூரையில் துளையிட்ட மர்ம நபர் 3 கிலோ தங்கத்தை திருடிச் சென்றுள்ளார்.
பெரம்பூரை
அடுத்த, கொளத்தூர் கடப்பா சாலையில் லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை
உள்ளது. இதன் உரிமையாளர் முகேஷ் குமார். இவர் அடகு கடை மற்றும் நகைக்கடை
நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மதியம் உணவு இடைவேளை விடுவதுண்டு.
நகைக்கடையின் மேற்கூரையில் ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு
துளையிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து முகேஷ் குமார்
அளித்த புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம்
போலீஸார் விசாரணை நடத்தினர்.
கடையின் மேற்கூரை வழியாக துளையிட்டு கயிறுபோட்டு இறங்கி 3 கிலோ தங்க நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீஸார் விசாரணையில் சில நாட்களுக்கு முன்னர்தான் மேல் தளத்தை ஒரு நபர் வாடகைக்கு எடுத்து குடிவந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கீழே நகைக்கடையில் திருட வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த நபர் மேலே வாடகைக்கு வந்திருக்கலாம் அவர் யார், எந்த ஊர் என்ற விபரங்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment