டெங்கு
காய்ச்சல் கட்டுப்படுத்தும் வகையில் அதிரை TIYA சார்பாக
இரண்டு முறை நிலவேம்பு கசாயம் மற்றும் மூன்று முறை
மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதனை
அடுத்து 13.09.2017அன்று காலை 6 மணிக்கு
3வது கட்டமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்றது.இதில் சுமார் 300க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றனர், பலர் தங்கள் வீடுகளுக்கு வாங்கி
சென்றனர்.
இதை தொடர்ந்து அன்று மாலை 4 மணிக்கு டெங்கு ஒழிப்பை வலியுறுத்தி தாஜுல் இஸ்லாம் சங்கத்திலிருந்து பேரணி புறப்பட்டடு.புறப்பட்டது இதற்க்கு அமீரக TIYA தலைவர் K.M.N.முகமது மாலிக் தலமையில் அதிரை TIYA தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் தாஜுல் இஸ்லாம் சங்க துணை தலைவர் P.M.K. தாஜுதீன், செயளாலர் M.S. ஜபுருல்லா ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணி துவைக்கிவைத்தனர், குப்பையை ஒழிப்போம் டெங்குவை விரட்டுவோம் என்ற முலக்கத்தோடு புறப்பட்ட பேரணியில் டெங்கு வராமல் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் பாதுகாப்பு முறைகள் குறித்தும் ஒலி பெருக்கி மூலம் விளக்கப்பட்டது. மேலத்தெரு எல்லா வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் தாஜுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தை வந்தடைந்தது'
ஏராளமான இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முஹல்லா வாசிகள் கலந்துகொண்டு டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிரை TIYA சார்பில் அமீரக தலைவர் நன்றி தெரிவித்தார்.
என்றும் அன்புடன்
அதிரை TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment