Latest News

  

பிரதமர் மோடி சர்வதிகாரியைப் போல செயல்படுகிறார்: எழுத்தாளர் ராமசந்திர குஹா பேச்சால் சர்ச்சை

வரலாற்றறிஞர், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா.
பெங்களூரு இலக்கிய விழாவில், பிரத‌மர் நரேந்திர மோடி சர்வதிகாரியைப் போல செயல்படுகிறார் என எழுத்தாளர் ராமசந்திர குஹா பேசியது மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு இலக்கிய விழா 6-வது ஆண்டாக அங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொடங்கியது. இரு நாட்கள் நடக்கும் இந்த விழாவில் எழுத்தாளர்கள் ராமசந்திர குஹா பால் சக்காரியா, பெருமாள் முருகன், அம்பை, காலச்சுவடு கண்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

எழுத்தாளர் ராமசந்திர குஹா பேசும் போது, '' நாட்டில் இப்போது தேசப்பற்று என்கிற பெயரில் மூர்க்கத்தனம் வளர்ந்துவிட்டது. மதம், சாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் மூர்க்கத்தனம் வாய்ந்த ஒரு கும்பல் வேகமாக‌ வளர்ந்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ அமைப்புகள் வலிமை வாய்ந்ததாக மாறிவிட்டன. இந்துத்துவ அமைப்புகள் சொல்வதையே மற்றவர்கள் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதை செய்யாவிட்டால் தேச விரோதி என முத்திரை குத்தி விடுகிறார்கள்.

ஒருமுறை புரட்சியாளர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், '' ஆன்மீகத்தில் பக்தி இருந்தால் கடவுள் உருவாகி விடுகிறார். அரசியலில் பக்தி இருந்தால் சர்வதிகாரி உருவாகி விடுவார்''என எச்சரித்தார். இப்போது இந்துத்துவ அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடியை பக்தியுடன் பின் தொடர்ந்து வருகிறார்கள். இதனால் மோடியிடம் சர்வதிகாரிக்கான குணாம்சம் ஏற்பட்டுவிட்டது. இந்தியாவில் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சர்வதிகாரியைப் போல‌ செயல்பட்டு வருகின்றனர்''என்றார்.

ராமசந்திர குஹாவின் இந்த பேச்சுக்கு பாஜக, விஹெச்பி, சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ராமசந்திரா குஹாவை கண்டித்து எழுதி வருகின்றன‌ர். ஏற்கெனவே கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளை தொடர்புப்படுத்தி பேசியதால் ராமசந்திர குஹாவுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

''சாதியை ஒழிப்பது அவசியம்'' - எழுத்தாளர் பெருமாள் முருகன் பேச்சு

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அம்பை, பதிப்பாளர் காலசுவடு கண்ணன் ஆகியோர் ''சாதியும் நானும்''என்ற நூலை முன்வைத்து பேசினர். பெருமாள் முருகன் பேசுகையில், '' இப்போதெல்லாம் சாதி யார் பார்க்கிறா? சாதி அழிந்துவிட்டது. ஒரு சில கிராமங்களில் மட்டுமே சாதி இருக்கிறது' என‌ பரவலாக பேசப்படுகிறது. இந்திய சமூகத்தில் கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் சாதி அழியாமல் இன்னும் ஆழமாக விஷமாக பரவி இருக்கிறது. தீண்டாமை, ஆணவப்படுகொலை, சாதிய கொடுமை நாள்தோறும் நடந்துக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.