
தனது முதல் குழந்தையான முரசொலி அலுவலகத்தில் பவள விழா கண்காட்சியை
திமுக தலைவர் கருணாநிதி நேற்று பார்வையிட்ட வீடியோ காட்சிகள்
வெளியாகியுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் திமுக
தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் முழுவதும்
மருத்துவர்களின் சிகிச்சையிலேயே இருந்து வந்தார். மேலும் தொற்று ஏற்படாமல்
இருக்க அவரை பார்ப்பதை அரசியல் கட்சியினர், தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்
என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதனால் முரசொலி பவள விழா கொண்டாட்டம், கருணாநிதி சட்டமன்றத்தில்
அடியெடுத்து வைத்த வைரவிழா கொண்டாட்டம், பிறந்தநாள் கொண்டாட்டம் என எதிலும்
அவரை தொண்டர்கள் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7
மணியளவில் கருணாநிதி முரசொலி அலுவலகத்திற்கு வந்தார்.
முதன்மை செயலாளர் துரைமுருகன், கருணாநிதியுடன் சேர்ந்து காரில் வந்தார்.
கருணாநிதியுடன் ஸ்டாலின், செல்வி, தமிழரசு உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
முரசொலி அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த முரசொலி காளையின் புருவத்தை
பார்த்து நெகிர்ந்தார். தொடர்ந்து முரசொலி அலுவலகத்திற்குள் சென்ற அவர்,
அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களளைப் பார்த்தார்.
ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் முரசொலி செல்வம் நீதிமன்றத்தில் நின்ற
காட்சியை விளக்கும் விதமாக கூண்டில் செல்வம் இருப்பது போன்ற அரங்கும்
வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்டாலின் கருணாநிதிக்கு விளக்கிச் சொன்னார்.
இதற்கு அடுத்தபடியாக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தனது மெழுகு சிலையை
கருணாநிதி மிகவும் ஆர்வத்துடன் ரசித்தார். ஸ்டாலின் அந்த சிலை பற்றிக்
கூறியதும் புன்முறுவலிட்டார் கருணாநிதி.
முரசொலி அலுவலக ஊழியர்கள் உரையாடியவர் அங்கிருந்த பதிவேட்டிலும்
கையெழுத்திட்டார். பின்னர் தன்னுடைய கைகளை அசைத்து கருணாநிதி தொண்டர்களை
பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஓராண்டிற்குப் பிறகு கருணாநிதியை
பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உறைந்து போயினர். இப்போது சமூக
வலைதளங்களில் கருணாநிதியின் இந்த வீடியோ வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment