சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து நவம்பர் 3-ம் தேதி சென்னை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் எதிரில் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற
உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று தேமுதிக
தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு திடீரென்று ரேசன்
கடைகளில் சர்க்கரை விலை 13.50 ரூபாய் லிருந்து, 25 ரூபாயாக உயர்த்தியது
வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வைக் கண்டித்துதேமுதிக பொதுச்
செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 03.11.2017 (வெள்ளிக்கிழமை)
காலை,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கண்டன
உரையாற்றுகிறார். இதில் மாவட்டம், பகுதி, வட்டம், கிளைக் கழக நிர்வாகிகள்,
சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த
ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment