இளம்பெண் ஹதியா.
கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் கேரள இளம் பெண்ணான அகிலா
என்னும் ஹாதியா, நவம்பர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கேரளத்தின் கோட்டயம் நகரில் மருத்துவக் கல்வி முடித்த 24 வயதான பட்டதாரி
இளம் பெண் அகிலா என்னும் ஹதியா. முஸ்லிம் இளைஞரைத் திருமணம் செய்து
கொள்வதற்காக இவர் கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாமுக்கு மாற்றப்பட்டதாக
சந்தேகப்பட்ட அவரின் பெற்றோர், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர். தங்களுடன்
இருந்தால் மட்டுமே அகிலாவால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கோரினர்.
வழக்கு விசாரிக்கப்பட்டபோது ஷெஃபி ஜஹான் என்பவருடன் நீதிமன்றம் வந்த அகிலா,
அவரைத் திருமணம் செய்துகொண்டுவிட்டதாகக் கூறினார்.
ஆனால் ‘அந்தத்
திருமணம் வெறும் நாடகம், தனக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அளவுக்கு
அவர் முதிர்ச்சி அடையவில்லை, பெற்றோருடன் இருப்பதுதான் அவருக்கு நல்லது’
என்று இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆணையிட்டது.
அதைத் தொடர்ந்து
அந்தப் பெண்ணை மணந்துகொண்டவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மையை
விசாரிக்குமாறு தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.)
உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஹதியாவிடம் விசாரணை மேற்கொள்ள
இயலவில்லை என என்ஐஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டதால் அவரை நவம்பர் 27-ம் தேதி ஆஜர்படுத்த உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment