சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலர் ஒருவர் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய பெண் தலைமை காவலர் ஸ்ரீதேவி எனபவர் பணியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு சக காவலர்கள் கொண்டு சென்றுள்ளனர். சோதித்து பார்த்த டாக்டர்கள், ஸ்ரீதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். ஸ்ரீதேவி 2003 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஆவார்.

No comments:
Post a Comment