முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திருச்சி விமான நிலையத்தில்
கத்தியால் தாக்க முயற்சி செய்ததாக கூறி கைது செய்த நபரை விசாரணைக்கு பின்
போலீசார் விடுவித்துள்ளனர்.
ஓபிஎஸ்
இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க வந்தக்
கூட்டத்தில், கத்தி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் சோலைராஜன் என்றும், அவர்
ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதும், தாக்குதல் நடத்த வரவில்லை அவர் என்றும் தெரிய
வந்துள்ளதாக போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து மாலை வரை போலீஸ்
நிலையத்தில் விசாரணை நடத்திய பின்னர் சோலைராஜன் விடுவிக்கப்பட்டார்.
இது
தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஓபிஎஸ், " என்னை தாக்க வந்ததாக கூறப்படும்
சம்பவம் தற்செயலாக நிகழ்ந்தது. தமிழக மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர்
வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த
வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்
போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேறும் வரை
தர்மயுத்தம் தொடரும் என்று கூறினார்.
No comments:
Post a Comment