திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலர்
தினகரனும் இணைந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பாஜக
ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பரபரப்பான தகவலை
வெளியிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 22
எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட
வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தினகரன் தரப்பு
எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும்; சபாநாயகர் தனபாலை முதல்வராக்க
வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
98+22 எம்.எல்.ஏக்கள்
திமுக- காங்கிரஸ்- முஸ்லிம் லீக் கட்சிக்கு 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
தற்போதைய நிலையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சிகளும்
இணைந்தால் பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் எளிதாக
கிடைத்துவிடும். ஆனால் அதிமுக- திமுக இணைந்து ஆட்சி அமைக்குமா? என்பதுதான்
கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
சு.சுவாமி பரபர தகவல்
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் இணைந்து சில
நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான
சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பரபரப்பான தகவலை பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஸ்டாலின் தரப்பும் தினகரன் தரப்பும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

பரபரப்பு
தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர்
பதிவு அமைந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment