இந்தியாவில்
இறக்குமதி வரி அதிக இறக்குமதி
குறைந்துள்ளது. எனவே தங்கம் இறக்குமதி மீது உள்ள வரியை
முழுமையாக நீக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சக அதிகாரி வியாழக்கிழமை
தெரிவித்தார்.
இறக்குமதி வரி குறைப்பதன் மூலம் உள்ளூர் சந்தையில்
தங்கம் மலிவானதாகவும், தேவை அதிகரிக்கவும் வைக்க முடியும், கடந்த ஆறு
வாரங்களில் உலகச் சந்தையில் தங்கம் மீதான விலை உயர்ந்தும் உள்ளது.
பரிந்துரை
2017
ஜூன் மாதம் தங்கம் விலை சற்று குறைந்தும் காணப்பட்டது. தங்கம் மீதான
இறக்குமதியைக் குறைப்பதன் மூலம் தங்கத்தினைக் கடத்துவது குறையும் என்றும்
ஜூலை 1 முதல் தங்கம் மீதான விற்பனை வரி உயர்ந்ததால் ஏற்பட்ட சிக்கலும்
குறையும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறை மேம்படுத்த திட்டம்
"தற்போது
தங்கம் இறக்குமதியில் உள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேம்படுத்த
மற்றும் இறக்குமதி வரி குறைக்க வரவு செலவுத் திட்டத்தில் உள்ள
முரண்பாட்டினை குறைக்க வேண்டும்" என இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூட்டு
செயலாளர் மனோஜ் திவிவேதி அன்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.
இறக்குமதி வரியைக் குறைக்கக் கோரிக்கை
இதனால்
வர்த்தக அமைச்சகம் தங்கம் மீதான இறக்குமதி வரியை நிதி அமைச்சகம் குறைக்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது ஆனால் எவ்வளவு சீக்கிரம்
நிறைவேற்றப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது குறித்து நிதி
அமைச்சக செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இறக்குமதி வரி
2013-ம்
ஆண்டு முதல் இந்தியாவில் தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக உயர்த்தி
அதன் மூலம் தங்கத்தின் விலையினை உயர்த்தித் தேவையினைக் குறைக்க
முடிவெடுத்தனர். ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 12.96
பில்லியன் டாலராக அதிகரித்தது. இதுவே ஒரு மாதத்திற்கு முன்பு தங்கம்
இறக்குமதி குறைந்து இருந்தது.
தொழிலாளர் அமைச்சகம் ஐடியல் விகிதத்தினை ஒரு கட்டமாகவோ அல்லது ஒரே அடியாகவோ குறைக்கப்படலாம் என்று திவவேதி கூறினார்.
தொழிலாளர் அமைச்சகம் ஐடியல் விகிதத்தினை ஒரு கட்டமாகவோ அல்லது ஒரே அடியாகவோ குறைக்கப்படலாம் என்று திவவேதி கூறினார்.
தங்கம் கடத்தல்
இந்தியாவில்
தங்கம் இறக்குமதி வரிகளை உயர்த்தியதில் கடத்தல் அதிகரித்துள்ளது. உலகத்
தங்க கவுன்சில் 2016-ம் ஆண்டு 120 டன்கள் தங்கம் கடத்தப்பட்டு இருக்கும்
என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சட்டப்படி இறக்குமதி செய்யப்பட்ட தங்கம்
இந்தியாவில்
சட்டப்படியாக மட்டும் 800 டன் வரை ஒவ்வொரு ஆண்டுத் தங்கம் இறக்குமதி
செய்யப்படுகின்றது. தங்கம் மற்றும் தங்க நகைகள் மத நன்கொடைகள், திருமண
மற்றும் விடுமுறை பரிசுகள், அல்லது முதலீடுகள் என உடனடியாகப் பணமாக
மாற்றப்படலாம்.
துபாய்
இந்தியாவில்
தங்கம் மீதான ஜிஎஸ்டி வரி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் ஆபரணத் தங்க விலை
உயர்ந்தது. இதனால் துபாய் மற்றும் பிற வெளிநாடுகளில் இருந்து தங்கம்
வாங்குவது அதிகரித்துள்ளது. இப்போது இறக்குமதி வரி நீக்கப்பட்டால் உலகில்
பல நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் தங்கம் வாங்குவார்கள்.

No comments:
Post a Comment