பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்
அன்பானவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ் )
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்...
இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை ரமழான் மாதம் முழுவதும் விழித்திருந்து, பசித்திருந்து, தனித்திருந்து ஒரு மாதகாலமாக நோன்பு நோற்று, ஒவ்வொரு முஸ்லிமுனுடைய புலனடக்கத்தையும், மனக் கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீக பயிற்சியாகவும் அமைந்துள்ளது. நோன்பு வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மாத்திரமின்றி, இந்த பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னகத்தே வளர்த்துக் கொள்வதே நோன்பின் அடிப்படை நோக்கமாகும் என்று அல் குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ளான்
அகிலத்திற்கும் ஓர் அருட்கொடையான புனித அல்குர்ஆன் ரமழான் மாதத்திலேயே பூமிக்கு அருளப்பெற்றது. இந்த வருடம் நோன்பு சிறப்பாக முடிவடைந்து விட்டது இந்த வருடம் போல் வருகிற அனைத்து நோன்பையும் நல்ல படியாக பிடிக்க ஆண்டவன் நம் அனைவருக்கும் கிருபை புரிவானாக. நம் அனைத்து பிழைகளையும் பொருத்தருளுவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அமீரக TIYA குழுமம் சார்பாக மேலத்தெரு முஹல்லா வாசிகள் மற்றும் TIYA வாசகர்கள் அதிரைவாசிகள் அனைவருக்கும், உலகில் பல பகுதிகளில் வாழ்ந்துவரும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இவ்வுலக முஸ்லீம்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்
அமீர்க TIYA குழுமம்
No comments:
Post a Comment