எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக மீராகுமார்
அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாஜகவின் அரசியல் அஜென்டாவுக்கு ஆடும்
பொம்மைகளாக எதிர்க்கட்சிகள் காட்சியளிக்கின்றன.
பிரதமர் மோடியின்
வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமையை நாடிய எதிர்க்கட்சிகள்
பல்வேறு மாநிலங்களில் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணம் வலுவான ஒரு
பார்வையும், தலைமையும் இல்லாததுதான்.
தங்கள் பலகீனத்தை இப்போது எதிர்க்கட்சிகள், குடியரசு தலைவர் வேட்பாளர் பட்டியலிலும் காட்டிவிட்டன.
பாஜகவுக்கு நல்லது
பாஜக தன் மீதானஉயர்ஜாதி ஆதரவு முத்திரையில் இருந்து வெளிவருவதற்காக
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை குடியரசு தலைவர்
வேட்பாளராக அறிவித்துள்ளது. அந்த கட்சியை பொறுத்தளவில் அது ஒரு மாஸ்டர்
ஸ்ட்ரோக் என அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. ஆனால்
காங்கிரசுக்கு என்னவாயிற்று?
காங்கிரஸ் பலகீனம் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற, ஜாதி சார்பற்ற கட்சி என பெயரளவுக்காவது பெயரெடுத்த கட்சி. அப்படியிருக்கும்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மீரா குமாரை அது ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் இல்லை. அவர்களாக விருப்பப்பட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்திருந்தால் அது வேறு. ஆனால் பாஜக தலித் வேட்பாளரை தேர்ந்தெடுத்ததால் போட்டிக்கு செய்ய வேண்டிய கட்டாயத்தால் செய்ததால் காங்கிரசின் பலகீனம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு பதிலடி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இப்படி கூறுகிறார், "ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பனியாவையோ, பிராமண சமூகத்தை சேர்ந்தவரையோ வேட்பாளராக நிறுத்தியிருந்தால் அது பாஜகவின் வாக்கு வங்கியை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கும்" என்கிறார். பாஜக நம்மை கைவிட்டுவிட்டது என்ற தோற்றத்தை முன்னேறிய ஜாதியினர் மத்தியில் ஏற்படுத்த அது உதவியிருக்கும். இது பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
No comments:
Post a Comment