நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது.
குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு அப்போது நடைபெறும்.
ஜூலை 17ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடைபெறும்
என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இன்று அறிவித்துள்ளது. விவகாரத்துறை
கூட்டம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த எம்.பிக்கள் வினோத் கண்ணா,
பல்லவி ரெட்டி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்
என்று தெரிகிறது.
ஜூலை 17ம் தேதிதான் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற
உறுப்பினர்கள், நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குப்
பதிவு மையத்தில் வாக்களிப்பார்கள்.
No comments:
Post a Comment