மேகாலயா மாநிலத்தின் பாரம்பரிய உடையை அணிந்து சென்ற பெண்ணுக்கு டெல்லி கோல்ஃப் கிளப்பில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். அஸ்ஸாம் அரசின் ஆலோசகரும், தொழில் முனைவோருமாக இருப்பவர் டாக்டர் நிவேதிதா பர்தாகுர். இவருடைய குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதற்காக இவர்களின் குடும்பத்துடன் தங்கியிருப்பவர் தைலின் லிங்கடோ (51).
மேகாலயா மாநிலத்தை சேர்ந்தவர் லிங்கடோ. இவர் பிரிட்டன் முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை வெளிநாடுகளுக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் நிவேதிதாவின் நண்பரும் டெல்லியில் உள்ள கோல்ஃப் கிளப்பில் நீண்ட காலமாக உறுப்பினராகவும் உள்ள ஒருவர் மரியாதை நிமித்தமாக கோல்ஃப் கிளப்பிறகு விருந்துக்கு அழைத்தார். அப்போது லிங்கடோவுக்கும் அழைப்பு நிவேதிதா அழைப்பு விடுத்தார். இதனையேற்று டெல்லி கோல்ப் இருவரும் கிளப்புக்கு சென்றனர். அப்போது லிங்கடோ மேகலாயாவின் பாரம்பரிய உடையில் வந்திருந்தார். கோல்ஃப் கிளப் ஊழியர் ஒருவர் லிங்கடோவின் அணிந்துள்ள உடை, வேலைக்காரர்கள் அணிந்துள்ளதை போன்று உள்ளதாக கூறி அவரை வெளியேற்றியுள்ளனர். டெல்லி கிளப்பின் இந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

No comments:
Post a Comment