உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை, இளைஞர்
ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச
மாநிலம் ஷாஷிகணேஷ்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக
இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவர், செல்போனை
சார்ஜ் செய்வது போல வீட்டிற்குள் சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய
முயன்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து அவரை தாக்கி
கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவரை மண்ணெண்ணை ஊற்றி
கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இளம்பெண்ணின் கூச்சல்
கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அதிர்ச்சியுற்றனர்.
பின்னர்
உடல் முழுவதும் தீபற்றிய நிலையில் இளம்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர்
அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி
இளம்பெண் துடிதுடித்து பலியானார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்
தப்பி ஓடிய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த
இளம்பெண்னை இளைஞர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அங்கு பெரும்
ஏற்படுத்தியுள்ளது..
No comments:
Post a Comment