சென்னை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் கடந்த 31-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கட்டிடம் இடிக்கும் பணியின் போது கடந்த 10-ம் தேதி எதிர்பாராதவிதமாக சரத்குமார் என்பவர் உயிரிழந்தார். எனவே கட்டிடம் இடிக்கும் பணி ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கட்டிடம் இடிக்கும் பணி இன்று தொடங்கிய நிலையில் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் முன் பகுதி தானாக இடிந்து விழுந்தது. தீ விபத்தில் கட்டிடம் உருக்குலைந்த நிலையில் நேற்று விழுந்த மழையால் கட்டிடத்தின் ஒரு பகுதி தானாக இடிந்து விழுந்ததுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்தில் உருக்குலைந்த கட்டடத்தின் ஒரு பகுதி தானாக விழுந்திருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment