செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் தொழிற்சாலை கிடங்கு ஒன்றில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. 157 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். 11 கிலோ மெக்காபெட்டமைன், 56 கிலோ சூடோபெட்ரின் மற்றும் 90 கிலோ ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் தயாரித்து கடத்த முயன்ற உரிமையாளர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 10 பேர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் என்று வருவாய் புலனாய்வுத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். போதை பொருள் தயாரித்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சென்னையில் சோப்பு தயாரிக்கும் ஆலை போன்று போதைப்பொருள் தயாரித்து கடத்தி வருவது மற்றும் சட்டவிரோதமாக மருந்து பொருட்களை போதை பொருட்களாக விற்பனை செய்வது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது சென்னையில் சோப்பு தயாரிக்கும் ஆலை போன்று போதைப்பொருள் தயாரித்து வரும் நிறுவனம் குறித்து போலீசார் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment