கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகள் மூடப்பட்டது என அறிவிக்கப்பட்ட சில நாட்களில் மீண்டும் மணல் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அந்த மணல் குவாரி மூடப்பட்டதாக அரசு அறிவித்தது.
சில நாட்களுக்கு பின் ஆழங்காத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆழங்காத்தானில் செயல்படும் மணல் குவாரிக்கு நாள்தோரும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கிறது. சரியான சாலை வசதி இல்லாத கிராமங்கள் இடையே லாரிகள் அடிக்கடி வந்து செல்வதால் விபத்துக்கள் நடக்கிறது. இதனால் மணல் குவாரிகளை மூடும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்று பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் நடந்த மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பொய்த்து போனதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் கடல் நீர் உட்புகுந்து குடிநீரும் உப்பாக மாறிவிட்டது என்பது அவர்களின் புகார் ஆகும்.
இந்நிலையில் மணல் குவாரிகளை மூடப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்தது கிராமமக்களை நிம்மதி அடைய செய்தது. ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மீண்டும் மணல் குவாரிகளை திறந்துள்ளது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment