கட்சியைப் பீடித்த சிக்கல்கள் எல்லாம் சீக்கிரம் தீரும். நான் உடனடியாக வெளி வர முடியாவிட்டாலும் தினகரன் விரைவில் வருவார் என்று சசிகலா கூறியிருந்த நிலையில் சொன்னபடியே தினகரன் வந்து விட்டதாக சசி தரப்பு அதிமுகவினர் குஷாலாக உள்ளனர். இரட்டை இலைக்கு விலை பேசிய வழக்கில், ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் தினகரன். திகார் சிறையில் இருந்து அவர் வெளியே வந்ததை ஜெயா டி.வி நிர்வாகி விவேக் உள்பட அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். ஆட்சி மற்றும் கட்சியில் இனி நினைத்தது நடக்கும் என உற்சாகமாக வலம் வருகின்றனர். மறுபக்கம், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தீர்ப்பை ஆய்வு செய்யும் ரிவியூ மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். ஓரிரு நாட்களில் இந்த மனுவின் மீதான விசாரணை தொடங்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
குறைந்தது 6 மாசம் வெளியே ஒருவேளை தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், குறைந்தது ஆறு மாதங்கள் வெளியில் இருக்கலாம் எனக் கணக்குப் போட்டு வருகிறார். இந்நிலையில், தினகரனின் வருகை சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களிடையே கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
உற்சாகத்தில் சசி குரூப் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, எம்.எல்.ஏக்களுக்காக எந்த நல்ல காரியத்தையும் செய்து கொடுக்கவில்லை. கூவத்தூரில் கொடுக்கப்பட்ட ரகசிய வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டார் முதல்வர். மாவட்டங்களில் அமைச்சர்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் எங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பணி ஒதுக்குங்கள் என்று கேட்டால், அமைச்சர்கள் அவமானப்படுத்துகின்றனர்.
காக்க வைத்து கடுப்படிக்கின்றனர் தலைமைச் செயலகத்துக்குள் சென்றாலே, நீண்டநேரம் காக்க வைக்கின்றனர். எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது என்ற உண்மையை எடப்பாடி ஒப்புக் கொள்வதில்லை. இதனை எதிர்த்துக் கூட்டமாக சில எம்.எல்.ஏக்கள் ஒன்று திரண்டால், செங்கோட்டையனை விட்டு சமாதானப்படுத்துகின்றனர்.
போய் அவர் கிட்டயே கேளுங்கப்பா ஒருகட்டத்தில், உங்களுக்கு வாக்குறுதி கொடுத்தது தினகரன்தான். அவரிடம் போய்க் கேளுங்கள்' துரத்திவிட்டனர். திகார் சிறையில் அடைபட்டுள்ள தினகரனை சந்திக்கவும் முடியவில்லை. தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சிலர் மட்டுமே, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து நிலவரத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.
நான் வருகிறேன்.. தினகரன் முதலில் வருவார் அவர்களிடம் பேசிய சசிகலா, கட்சியின் எதிர்காலத்துக்காக சிறையில் இருந்து வெளியில் வர வேண்டும் என விரும்புகிறேன். என்னால் வர முடியாவிட்டாலும், தினகரன் உறுதியாக வெளியில் வருவார். நம்மை சூழ்ந்துள்ள சிக்கல்கள் விலகும் என நம்பிக்கையோடு கூறியிருக்கிறார். நாங்களும் தினகரன் வருகைக்காக காத்திருந்தோம். இனி எங்களுக்குச் சேர வேண்டியது வந்து சேரும்என நம்பிக்கையோடு விவரித்தார் அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர். காசேதான் கடவுளடா.. அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா!

No comments:
Post a Comment