Latest News

அப்பாடா.. நாம மந்திரியாகிடலாம்.. செம குஷாலாக காணப்படும் தினகரன் எம்.எல்.ஏக்கள்!


டிடிவி தினகரன் வெளியே வந்திருப்பதால் யாருக்கு சந்தோஷமோ, இல்லையோ அவரை நம்பியிருக்கும் சில எம்.எல்.ஏக்களுக்கு குஷியோ குஷியாம். காரணம், எப்படியும் நம்மை தினகரன் அமைச்சராக்கி விடுவார் என்ற நம்பிக்கைதான். தினகரன் சிறையில் இருந்ததால், அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் மிகுந்த தயக்கம் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. அதிலும் ஏற்காடு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போதும், அமைச்சரவையில் மாற்றம் இல்லை என பொட்டில் அடித்தாற் போல கூறி விட்டார். 

இதைக் கேட்டு கடுப்பாகிப் போனார்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர். இப்ப வரும் பாரு தற்போது தினகரன் வந்துவிட்டதால், முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்து அவர்கள் தயாராகி வருகின்றனராம்.

எப்ப வேணும்னாலும் தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், இன்பதுரை உள்ளிட்டவர்கள், எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர். இன்று வரையில் சசிகலா மீதான பாசத்தையும் இவர்கள் கைவிடவில்லை. '

ஜெயக்குமார் கிடக்கிறார் என்னதான், தினகரனுடன் நாங்கள் பேச மாட்டோம். கட்சியில் இருந்து அவர் விலகிவிட்டார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினாலும், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட சசிகலா ஆதரவு அமைச்சர்கள் பகிரங்கமாக தினகரனை வரவேற்கத் தொடங்கிவிட்டனர்.
Dinakaran supporters await for minister posts
20 பேர் இருக்காங்களாம்ப்பு! இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ, எம்.பிக்கள் சசிகலா ஆதரவு அணியில் உள்ளனர். ஆட்சிக்கு எதிராக இவர்கள் செயல்பட மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி. ஆதரவை விலக்கிக் கொண்டால், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற உண்மை அவர்களுக்கும் தெரியும். நாம் எப்போதும்போல அமைதியாக இருப்போம் என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் முதல்வர்.

உளவுத்துறை கண்காணிப்பு மறுபக்கம் தினகரனின் செயல்பாடுகளை ஆளும் பா.ஜ.க அரசின் உளவுத்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆட்சி அதிகாரத்துக்குள் அவர்கள் தலைதூக்குவது தெரிந்தால், பெரா வழக்குகளின் தீர்ப்புக்கு நாள் குறிக்கும் வேலைகள் தொடங்கிவிடும் என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.