Latest News

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... வீடுகள் குலுங்கியதால் அலறியடித்து வெளியேறிய மக்கள்!

 Earthquake tremors were felt in New Delhi and parts of North India today.
டெல்லியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேலில் 4.7ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். டெல்லி மற்றும் வடமாநில பகுதிகளில் இன்று காலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 4.7ஆக பதிவானது.

ஹரியானா மாவட்டத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கி வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. இதனால் பீதியடைந்த மக்கள் பதறி துடித்து எழுந்தனர். பின்னர் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய அவர்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை. கடந்த 28ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பதர்வா மற்றும் தோடா ஆகியப் பகுதிகளில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 7.23 மணியளவில் 4.7 ரிக்டர் ஸ்கேலும் இதைத்தொடர்ந்து இரவு 7.48 மணிக்கு 3.2 ரிக்டர் ஸ்கேலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.