பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
அதே போன்று மேகாலய மாநிலத்தில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் அம்மாநிலத்தின் கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவரான பெர்னார்ட் மராக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார்.
மாட்டிறைச்சி தின்னும் பாஜக தலைவர்கள் மாட்டிறைச்சி தடை குறித்து, கேரோ மலைப்பகுதி மாநிலத்தின் தன்னாட்சிப் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மாநிலத்தின் பல பாஜக தலைவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்களே என்று பெர்னார்ட் துணிச்சாலாக கூறினார்.
திணிக்க முடியாது மேலும், மலைப்பகுதிகளில் அமலில் இருக்கும் அரசியலமைப்பு பிரிவுகள், அதன் வரலாற்று பின்னணி ஆகியவற்றை மாநில பாஜக தலைவர்கள் அறிவார்கள், மாட்டிறைச்சி தடை என்பதை இங்கே திணிக்கக் கூடாது என்று பெர்னார்ட் உறுதியாகக் கூறினார்.
மாட்டிறைச்சி கலாச்சாரம் மாட்டிறைச்சி எங்களது கலாச்சாரம். அதனை விட்டுவிட்டு எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தனது பேஸ்புக்கிலும் துணிச்சலாக பெர்னார்ட் பதிவிட்டார். மேலும், பாஜகவின் கொள்கையை மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றும் இன்னொரு பதிவில் தெரிவித்தார்.
ராஜினாமா இந்நிலையில், நேற்று அவர் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்னார்ட் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதம் ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார். மேகாலய மாநிலத்தின் முக்கிய தலைவராக இருந்து பாஜகவிற்காக பணியாற்றிய பெர்னார்ட் கட்சியில் இருந்து அதுவும் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ராஜினாமா செய்திருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment