மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பாஜகவில் இணைந்தார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.
தமிழ்
திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர் பொன்னம்பலம். திரைப்படங்களில்
நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்த பொன்னம்பலம், அதிமுகவில் சேர்ந்தார்.
அக்கட்சியின் பேச்சாளராக பொன்னம்பலம் சுற்றித் திரிந்து பேசி வந்தார்.
இந்நிலையில், திடீரென ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன் பிறகு எந்த அணியில்
இணைவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பொன்னம்பலம்.
இதனால்
சத்தமில்லாமல் அமைதியாக இருந்த அவர் இன்று மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். கட்சியில்
சேர்ந்த உடன், இந்தியாவை பாஜகவால் மட்டுமே முடியும் என பொன்னம்பலம்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment